அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை குறைக்கும் நோக்கில் ஆன்லைன் தேர்வுகள் நடத்துவது குறித்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின் செய்தியாளர்…

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை குறைக்கும் நோக்கில் ஆன்லைன் தேர்வுகள் நடத்துவது குறித்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின் செய்தியாளர் சம்ந்திப்பில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பிப்ரவரி 1-ல் இருந்து பிப்ரவரி 20 வரை அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் எனவும் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் எனவும் ஜனவரி 21 ஆம் தேதி அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது, அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார். இது குறித்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12.94 லட்சம் கலைக் கல்லூரி மாணவர்களும், 1.97 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்களும், பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,301 மாணவர்களும் 4.57 லட்சம் பொறியியல் மாணவர்களும், பயனடைவார்கள் என விளக்கமளித்தார்.

மேலும், 20 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதுகின்றனர் எனவும், இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம் நேரடியாக நடக்கும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.