ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் – மீத்தேன் ஜெயராமன் ஆட்சியரிடம் மனு

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இயங்கிவரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.…

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இயங்கிவரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

2011ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு 2017ம் ஆண்டில் மூடப்பட்டு விட்டது. இந்நிலையில் திருவாரூர் மாவட்ட பகுதியில் பெருந்துறை  ஊராட்சி பகுதியில் உள்ள மேப்பலம் மற்றும் பெருங்குடி ஆகிய இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல், இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின்செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில், டெல்டா மண்டல பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகளை மீண்டும் புதிய தொழில்நுட்பத்துடன் செயல்பாட்டிற்கு கொண்டு வர இருக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

அண்மைச் செய்தி: திடீர் பயணமாக உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இதுதொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு  கூட்டமைப்பை சார்ந்த ஜெயராமன் பேசுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.