உதவி பேராசிரியராக நெட், செட், ஸ்லெட் தேர்வில் ஒன்று கட்டாயம்: யுஜிசி அறிவிப்பு!

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக நெட், செட், ஸ்லெட் ஆகிய ஏதாவதொரு தேசிய, மாநிலத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு…

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக நெட், செட், ஸ்லெட் ஆகிய ஏதாவதொரு தேசிய, மாநிலத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) அறிவித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு ஜூலை 2023 வரை உதவிப் பேராசிரியர்களுக்கான நேரடி நியமனத்திற்கு பி.எச்.டி., கட்டாயமில்லை என்று அறிவித்தது. தற்போது பேராசிரியராக பணியாற்ற பி.எச்.டி., முடித்தால் போதுமானது என யுசிஜி கொண்டுவந்த விதி இரண்டாவது முறையாக திருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து யுசிஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

”கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் மற்றும் இதர கல்வி ஊழியர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளில் உள்ள விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய தகுதித் தேர்வு(நெட்) மாநில தகுதித் தேர்வான(செட்), மாநில அளவிலான தகுதித் தேர்வு(ஸ்லெட்) போன்ற ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

https://twitter.com/ugc_india/status/1676447983272091649?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1676447983272091649%7Ctwgr%5E42ed15b35d01b670e78b59854fa381822896dea7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Findia%2F2023%2Fjul%2F05%2Fnet-set-or-slet-mandatory-for-direct-recruitment-of-assistant-professors-for-all-higher-education-institutions-4032746.html

இது இரண்டாவது முறையாக திருத்தப்பட்டுள்ள விதிமுறைகள். மேலும், உதவிப் பேராசியர் பணிக்கு பி.எச்.டி.,(முனைவர் பட்டம்) தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, நெட், செட், ஸ்லெட் ஆகிய ஏதாவதொரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.”

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.