தற்போது, ட்விட்டரில் “அன்ரைவல்டு தளபதி விஜய்” என்னும் ஹேஷ்டேக் அதிகளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அதில், பொங்கல் வின்னர் வாரிசு எனவும், விநியோகஸ்தர்களுக்கு 100 கோடி வரை லாபம் ஈட்டிதந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். நாடு முழுவதும் இவரது திரைப்படங்களின் விநியோகம் செய்யப்படும் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த அளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சஞ்சய்தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், திரிஷா,பிரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர், சமீபத்தில் லியோ திரைப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷியுப் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
லியோ திரைப்படத்திற்கு முன்பாக விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் நடிகர் அஜித்தின் ”துணிவு” திரைப்படத்துடன் களமிறங்கியது. வெவ்வேறு கதைக்களம் கொண்ட இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்தன. இருப்பினும், வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப ஒற்றுமையை பேசும் படமாக அமைந்ததால் விஜய் ரசிகர்கள் சற்று தோய்வுடன் இருந்தனர். இரு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நல்ல வசூல் செய்த நிலையில்,
தற்போது, ட்விட்டரில் “அன் ரிவைல்ட் தளபதி விஜய்” என்னும் ஹேஷ்டாக் அதிகளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அதில், பொங்கல் வின்னர் வாரிசு எனவும், விநியோகஸ்தர்களுக்கு 100 கோடி வரை லாபம் ஈட்டிதந்தது வாரிசு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் விஜய் மற்றும் அஜித்-க்கு தனி இடம் உண்டு. இருவருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். ஆனால், இருவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்கின்றனர். விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒரு காலத்தில் மோதிக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், நாங்கள் நல்ல நண்பர்கள் என கூறி வதந்திகளுக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால் அவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தற்போது மோதி வருகின்றனர்.








