பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டிய பாஜக எம் பி- யை கைது செய்யக்கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மல்யுத்த விளையாட்டு வீரர்கள் மீது பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பாஜக
எம் பி பிரிட்ஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி , இந்திய ஜனதாயக
வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர்
அமைப்புகள் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், நீதி கேட்டு போராடி வரும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளை
டெல்லி காவல்துறையினர் கண்டித்ததை எதிர்த்தும் , தலைமை தபால்
நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரிய நடவடிக்கை
இல்லாத பட்சத்தில், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
-கு. பாலமுருகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: