ஒரே இந்தியா, ஒரே வாக்கு, ஒரே குரல்! – நடிகர் கமல்ஹாசன் பதிவு!

ஒரே இந்தியா,  ஒரே வாக்கு,  ஒரே குரல்,  நீங்கள் விரும்பும் மாற்றமாக மாறுங்கள் என்று பதிவிட்டு ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து…

ஒரே இந்தியா,  ஒரே வாக்கு,  ஒரே குரல்,  நீங்கள் விரும்பும் மாற்றமாக மாறுங்கள் என்று பதிவிட்டு ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா, காஜல் அகர்வால்,  சித்தார்த்,  ரகுல் ப்ரீத் சிங்,  ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளன.

திரைப்படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  அந்த வகையில் பெங்களூருவில் மே – 18ம் தேதி நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின்போது,  ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில்,  உலகநாயகன் கமல்ஹாசன்,  இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு ‘இந்தியன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.  ‘இந்தியன் 2’  திரைப்படத்தின் முதல் சிங்கிள் வருகின்ற மே 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  மேலும், இந்த திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “தமிழ்நாடு, கேரளாவிற்கு இன்று மழை ரெட் அலர்ட்” – டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

இந்நிலையில்,  தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  இதையடுத்து, இந்தியன் – 2 திரைப்படத்தின் புதிய போஸ்டருடன்  “ஒரே இந்தியா,  ஒரே வாக்கு, ஒரே குரல், நீங்கள் விரும்பும் மாற்றமாக மாறுங்கள். பொறுப்புடன் வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.