டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மைத் தொற்று உறுதி

டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்ப் பரவலை உலகளாவிய சுகாதார அவசர நிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. பல…

டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

குரங்கம்மை நோய்ப் பரவலை உலகளாவிய சுகாதார அவசர நிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. பல காரணங்களுக்காக உலகளாவிய குரங்கு அம்மை நோய் பரவல் பொது சுகாதார அவசர நிலையைப் பிரதிபலிக்கிறது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்ட 31 வயது மதிக்கத்தக்க நபர் மவுலான ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் வெளிநாடு செல்லாத நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. காய்ச்சல் மற்றுல் தோல் புண் ஆகிய அறிகுறியுடன் வந்த நபருக்கு பரிசோதனை நடத்தியபோது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மவுலான ஆசாத் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கேரள மாநிலத்தில் மூன்று பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் ஒருவருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.