நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல்…

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா மற்றும் ரோஹித் யாதவ் கலந்து கொண்டிருக்கின்றனர். தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால், இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 19 ஆண்டுகள் கழித்து பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு கடந்த 2003 ஆம் ஆண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் பதக்கம் வென்றிருந்தார். அதைத்தொடர்ந்து, 19ஆண்டுகள் கழித்து 23 வயதான நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், நீரஜ் சோப்ரா மீண்டும் ஒருமுறை வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் 2ஆவது நபர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் நாடே பெருமிதம் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

 

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.