தீபாவளியையொட்டி, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு.!

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தீபாவளியையொட்டி  நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தீபாவளியன்று காலையிலேயே எழுந்து எண்ணெய்…

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தீபாவளியையொட்டி  நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தீபாவளியன்று காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிவது வழக்கம்.
மேலும் குடும்பத்தினரோடு வீடுகளில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொள்வர். தொடர்ந்து குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வர்.

அந்த வகையில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற,  அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில்  காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.  மேலும் கோவிலில் சிறப்பு வழிபாடுகள்  நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

அதேபோன்று திருநெல்வேலி பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் தீபாவளியை முன்னிட்டு மக்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.