தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவுன்சிலர்!

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியில், டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி 15…

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியில், டாக்டர் அம்பேத்கர்
133 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி 15
வார்டுகளை உள்ளடக்கியது. இதில் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் பரமசிவம்,
‘சமத்துவ திருநாளான’ அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,
தூய்மைப் பணியாளர்களுக்கு மலர் மாலை, சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

மேலும், ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து, தூய்மை பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

—-கு.பாலமுருகன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.