கோழியையும் முட்டைகளையும் விழுங்கிய பாம்பு – வைரலான வீடியோ!

கடலூரில், கோழிக்கூண்டில் இருந்த கோழி மற்றும் முட்டைகளை விழுங்கும் பாம்பின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் , வெளிசெம்மண்டலத்தை சேர்ந்தவர் துரை. இவர், தனது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட கோழிகள்…

கடலூரில், கோழிக்கூண்டில் இருந்த கோழி மற்றும் முட்டைகளை
விழுங்கும் பாம்பின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் , வெளிசெம்மண்டலத்தை சேர்ந்தவர் துரை. இவர், தனது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்த்து, அதற்காக வீட்டின் அருகில் கோழி கூட்டை வைத்திருந்தார். இதில் ஒரு கோழி முட்டைகள் இட்டு, அடைகாத்து வந்தது. அவற்றில் சில முட்டைகளில் இருந்து குஞ்சு பொரித்திருந்த நிலையில் , கோழி கூட்டடை துரை பார்த்த போது அடைகாத்த கோழி இறந்து கிடந்தது.

மேலும், அருகில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த
துரை, உடனடியாக பாம்புபிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து
வந்த செல்லா கோழிக்கூண்டில் முட்டைகளை விழுங்கிக் கொண்டிருந்த பாம்பினை
பிடித்தார். பின்னர், பிடிபட்ட அந்த பாம்பு சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு
என்பதும், அந்த பாம்பு 7 முட்டைகளை விழுங்கியதும் தெரியவந்தது.

மேலும், பிடிபட்ட அந்த பாம்பு திடீரென விழுங்கிய முட்டைகளை அடுத்தடுத்து
கக்க தொடங்கி கோழி குஞ்சு ஒன்றையும் கக்கியது. தொடர்ந்து , பாம்பு பிடி வீரர்
செல்லா, அந்த பாம்பினை பிடித்து அதனை பிளாஸ்டிக் டப்பாவிற்குள் அடைத்து
பாதுகாப்பாக கொண்டு சென்றார்.

—-கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.