முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனை கூட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குமாறு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை மறுநாள் காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதில், தொற்று அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்கள் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கவும் முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.







