கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட சிலையை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
தனது ஒப்பற்ற பொறியியல் ஆற்றல் மூலம் முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டி தென் தமிழகத்தின் நீராதாரத்தை மேம்படுத்தி அப்பகுதி வேளாண்மை வளத்திற்குத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் கர்னல் ஜான் பென்னிகுயிக். அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த ஊரான லண்டன் கேம்பள்ளியில், தமிழக அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை இன்று இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். சிலை திறப்பு நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் சந்தான பீர் ஒளி, செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன், தங்கத்தமிழ்ச்செல்வன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இங்கிலாந்து மகாராணியின் திடீர் மரணத்தால் கர்னல் ஜான் பென்னிகுக் சிலை திறப்பு நிகழ்வு எளிமையாக நடைபெற்றது. கலாச்சார நிகழ்வுகள், விருது வழங்கும் நிகழ்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.







