மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்கும் அமித்ஷா, அரவிந்தர் ஆசிரமம், பாரதியார் இல்லம் ஆகியவற்றை பார்வையிட செல்கிறார்.
அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் மதிய விருந்தில் பங்கேற்கும் அவர், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசுகிறார். மேலும், கம்பன் கலை அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி, பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்கிறார்.
இதையடுத்து, அரவிந்தர் ஆசிரமம், பாரதியார் இல்லம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளதால் அமித்ஷா வரும் வழித்தடங்களில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.







