ஆம்னி பேருந்துகள் நாளை இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து போக்குவரத்து நாளை முதல் இயங்கும் என்று ஒரு அமைப்பும், இயங்காது என்று வேறு ஒரு அமைப்பும் கூறியுள்ளதால், மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இன்று முதல் ’இரவு நேர ஊரடங்கு’ தொடங்க உள்ள நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்குவதில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஆனால் மற்றொரு சங்கத்தின் தலைவர் அப்சல், ஆம்னி பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தங்களிடம் உள்ள 490 ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் ஆம்னி பேருந்துகள் நாளை இயங்குமா அல்லது இயங்காதா என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.