முக்கியச் செய்திகள் விளையாட்டு

சிஎஸ்கே அணியின் வெற்றி பிற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கை!

சிஎஸ்கே அணியின் வெற்றி பிற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கை என இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளர் வாகன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி இதுவரை 3
ஆட்டங்களில் பங்கேற்று 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. தனது முதல் ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்டு தோல்வி கண்டது. இதையடுத்து கடந்த 16ம் தேதி பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்த்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. இதில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது. நடந்து முடிந்த மூன்று ஆட்டங்களில் கடைசி இரண்டு ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதுடன் புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இதுகுறித்து இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளர் வாகன் கூறியதாவது, “கடந்த ஆண்டு அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், இந்தியாவிற்கு வந்தவுடன் சிஎஸ்கே அணிக்கு ஏதோ புத்துணர்ச்சி கிடைத்தது போல் விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணியின் இந்த வெற்றி பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற பிற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்” என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

DPL டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது!

Halley karthi

’வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய்’: முதல்வர் அன்னையர் தின வாழ்த்து

Halley karthi

3ம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆர்.பி.உதயகுமார்

Saravana Kumar