தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு முத்திரைத் தீர்வை கட்டணத்திலிருந்து 100 சதவீதம் விலக்கு அளிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு இரண்டு வகையாக பிரித்து முத்திரைத்தீர்வை கட்டணத்திலிருந்து விலக்கு வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு மென்பொருள் உற்பத்தி கொள்கையின் கீழ் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு முத்திரைத் தீர்வை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத் தீர்வை கட்டணவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், திருச்சியில் தொழில் தொடங்குவோருக்கு 50 சதவீதம் முத்திரைத் தீர்வை கட்டண விலக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







