ஒமிக்ரான்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு

ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பு குறித்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒமிக்ரான் அதிகரிப்பு குறித்து மத்திய அரசு…

ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பு குறித்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒமிக்ரான் அதிகரிப்பு குறித்து மத்திய அரசு அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்திய மாநிலங்கள் மற்றும் ஒமிக்ரான் பாதிப்புள்ள மாநிலங்களுக்கு மத்திய குழுக்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள 4 பேர் கொண்ட மத்திய குழுவினர், கடந்த 26-ஆம் தேதி மாலை சென்னை வந்தனர். 5-நாட்கள் தங்கி ஆய்வு செய்யும் இக்குழுவினர், மூன்றாவது நாளாக இன்று, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவமனையில், ஆக்சிஜன் இருப்பு குறித்தும், கையாளப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கொரோனா வார்டு, RTPCR ஆய்வகத்திற்க்கு சென்று பார்வையிட்ட குழுவினர், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியுடன் ஆலோசனை நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.