முக்கியச் செய்திகள் தமிழகம்

மழை, வெள்ள பாதிப்பு: மத்திய குழுவினர் முதலமைச்சருடன் ஆலோசனை

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த பருவமழை கனமழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கடும் நஷ்டத் துக்கு ஆளாகி இருக்கின்றனர். சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன.

இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, மத்தியக் குழுவினர் சென்னை வந்தனர். 7 பேர் கொண்ட மத்தியக் குழுவினர், கடந்த 22, 23 ஆம் தேதிகளில் ஆய்வு செய்தனர். இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய குழுவினர் இன்று காலை சந்தித்தனர்.

உள்துறை இணைசெயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் ஒரு குழுவாகவும், ஆர்.பி.கவுல் தலைமையிலான 3 பேர் ஒரு குழுவாகவும் பிரிந்து, தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு குறித்து மத்திய குழுவினருடன் முதலமைச்சர் ஸ்டாலின், ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

சங்கரய்யாவின் வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்: பாரதிராஜா

Vandhana

வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள்

Halley karthi

டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு 4 தமிழர்கள் தகுதி!

Gayathri Venkatesan