முக்கியச் செய்திகள் தமிழகம்

வருங்காலத்தில் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டப்படுபவரே பிரதமர்; கோவை நாகராஜன்

வருங்காலத்தில் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டப்படுபவரே பிரதமர் என திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி. கோவை நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை நாகராஜன் உள்பட சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களை சேர்ந்த, அதிமுக, அ.ம.மு.க, த.ம.க, பா.ம.கா, கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என மொத்தம் 900 மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை நாகராஜன், தன்னை பின்தொடர்ந்து ஏராளமான அதிமுகவினர் திமுகவில் இணைவார்கள் என்றார். கோவையை முதன்மை மாவட்டமாக மாற்ற மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாகவும் வருங்காலத்தில் அவரால் சுட்டிக்காட்டப்படுபவரே பிரதமர் என்று நாகராஜன் கூறினார்.

மேலும், கோவை மாவட்டத்தை திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக மாற்றுவதற்கு பணியாற்றுவேன் என்றும், ராமனுக்கு அணில் போல கோவை மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு முதல்வருக்கு துணையாய் இருப்போன் என்றும், எதிர்காலம் திமுகவிடம் தான் இருக்கிறது. நான் தான் ஓபனிங் பேட்மேன் ஒருவர் பின் ஒருவராக இனி திமுகவில் வந்து இணைவார்கள் என அவர் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டறிய அரசுக்கு உயர்நீதிமன்றம் சொன்ன யோசனை!

Ezhilarasan

மதுரை குழந்தைகள் காப்பகத்தில் போலி இறப்பு சான்றிதழ்கள், அரசு முத்திரைகள் கண்டெடுப்பு

Vandhana

“விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்” – மத்திய அமைச்சர்

Halley Karthik