ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்(36) ராணுவ வீரரான இவர், ஜம்மு-காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பணியில் இருந்தபோது, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து ராணுவ வாகனத்தில் ஆறுமுகத்தின் உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

இராணுவத்தில் பணிக்கு சேர்ந்து 16 வருடங்கள் பணிபுரிந்த ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் 13 வயதுடைய ஒரு மகளும், 7வயதுள்ள மகனும் உள்ளனர்







