முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இப்போது தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான், தென்னாப்பிரிக் காவில் கண்டறியப்பட்டன. இது பல்வேறு நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேகமாக பரவும் தன்மையை கொண்ட இந்த ஒமிக்ரானை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் பல்வேறு நாடுகளில் இந்த வகை தொற்று பரவியுள்ளது. இதுவரை இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப் படுகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் சிலருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் 18, ராஜஸ்தானில் 9, டெல்லியில் 2, குஜராத்தில் 3, ஆந்திராவில் 1, கர்நாடகாவில் 3 சண்டிகரில் 1 என ஒமிக்ரான் கண்டறியப் பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவை விரட்ட புதிய யுக்தி; கிம் அதிரடி

Saravana Kumar

தசரா விழாவில் தொடர்ந்து வெடித்த பட்டாசு.. யானை மிரண்டதால் பொதுமக்கள் ஓட்டம்

Halley Karthik

காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து

Ezhilarasan