முக்கியச் செய்திகள் தமிழகம்

ஹெலிகாப்டர் விபத்து பற்றி அவதூறு: பாக். ட்விட்டர் கணக்குகள் மீது வழக்கு

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்களின் இறப்பு குறித்து அவதூறு செய்திகளை பரப்பியதாக பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8 ஆம் தேதி  விபத்துக்குள்ளானது. இதில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முப்படை தளபதி உயிரிழந்ததை அடுத்து உலக நாடுகள் இரங்கல் தெரிவித்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விபத்து நடத்த பகுதி

இந்நிலையில், பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்த ராணுவ வீரர்களின் இறப்பு குறித்து பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் தவறாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் செய்திகளை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக World Conflicts Monitoring @ Centre WorldBreakingN9 மற்றும் Pakistan Strategic Forum @ ForumStrategic ஆகிய இரண்டு பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் சைபர் க்ரைம் பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘சொற்ப பாக்கியைக் காரணம் காட்டி, நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா?’ – சி.பி.ஐ (எம்)

Arivazhagan Chinnasamy

தடகள வீராங்கனை சாந்தி சவுந்தராஜனின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

Jeba Arul Robinson

கணவன் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது குற்றம் என அழைக்க முடியுமா? நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவின் சர்ச்சை பேச்சு

Jeba Arul Robinson