ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லாவ்லீனா அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார். 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற வில்வித்தை தனிநபர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா ரஷ்யாவைச் சேர்ந்த பெரோவாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6க்கு 5 என்ற கணக்கில் தீபிகா குமாரி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிசுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். தகுதி சுற்றில் முதல் 8 இடங்களைப் பிடித்தவர்களே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், மனு பாக்கர் 11வது இடத்தையும், ராஹி சர்னோபத் 32வது இடத்தையும் பிடித்தனர். இதனால், இருவரும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தனர்.

அதன்பின்னர் நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லாவ்லீனா, சீனா தைபே வீராங்கனையை 4-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது.

Advertisement:
SHARE

Related posts

Amazon Prime -ல் இந்தியில் வெளியாகும் சூரரைப் போற்று!

Gayathri Venkatesan

விவாகரத்தான பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் ஏமாற்றிய கும்பல் கைது

Ezhilarasan

அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பிய இந்தியா

Jayapriya