ஆபாசப் பட விவகாரம்: நடிகையின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆபாசப் பட விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி, நடிகை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆபாசப் படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றிய புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது…

ஆபாசப் பட விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி, நடிகை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆபாசப் படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றிய புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜ்குந்த்ராவின் ஆபாசப் படங்களில் நடித்த நடிகைகளையும், தொழில் ரீதியாக அவருடன் தொடர்பு வைத்திருந்த நடிகைகளையும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

சில நடிகைகளுக்கு அவர்கள் சம்மன் அனுப்பியும் உள்ளனர். சிலர் இதில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜ்குந்த்ரா பற்றி இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு புகார் கூறியிருந்தார். அவருடன் பணியாற்றியது தனக்கு மோசமான அனுபவம் என்று கூறிய அவர், ராஜ்குந்த்ரா மீது பாலியல் புகாரும் கூறியிருந்தார்.

அதில், ‘ 2019 ஆம் வருடம் ராஜ் குந்த்ராவின் மானேஜர் தொடர்புகொண்டு புராஜெக்ட் பற்றி பேச வேண்டும் என்றார். பேசினோம். அதன் பிறகு திடீரென்று ராஜ் குந்த்ரா என் வீட்டிற்கு வந்தார். நான் அவரைத் தடுத்தும் என்னை முத்தமிடத் தொடங்கினார். தொடர்ந்து முன்னேறியதால் பயத்தில் அவரைத் தள்ளிவிட்டு பாத்ரூமுக்கு சென்று பூட்டிக் கொண்டேன். அவர் கிளம்பும் வரை வெளியே வரவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜ் குந்த்ராவுடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து விசாரிக்க போலீசார் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.