ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி, சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
டோக்கியோவிலிருந்து தமிழ்நாடு திரும்பிய பவானி தேவி, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது, தான் பயன்படுத்திய வாளை முதலமைச்சருக்கு பரிசாக அளித்த பவானிதேவிக்கு, அதே வாளை திரும்ப பரிசாக அளித்த முதலமைச்சர், அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதனையும் பவானி தேவி சந்தித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பவானிதேவி, ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியதாக முதலமைச்சர் தன்னை பாராட்டியதாக கூறினார்.