அண்மையில் இணையத்தில் பகிரப்பட்ட பழைய திருமண அழைப்பிதழ் ஒன்று வைரல் ஆகியுள்ளது.
ஜோடிகள் தங்கள் திருமணத் தேதிகளை முடிவு செய்ததைத்தொடர்நது தனித்து நிற்கும் தனித்துவமான அழைப்பிதழ்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர். இதற்காக பல்வேறு விதமான அழைப்பிதழ்களை அவர்கள் இணையத்தில் தேடுகின்றனர்.
திருமணம் அழைப்பிதழ் தொடர்பாக உறவினர்கள், நண்பர்களிடம் யோசனை கேட்கின்றனர்.
இந்நிலையில், பழைய திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் மணமக்களின் பெயர் மற்றும் அவர் படித்த கல்வி நிறுவனங்கள் (ஐஐடி பாம்பே, ஐஐடி டெல்லி) இடம் பெற்றுள்ளது.
இந்த பதிவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஐஐடி பாம்பே வெட்ஸ் ஐஐடி டெல்லி என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அழைப்பிதழில் ஐஐடியில் பெற்ற ரேங்க் போடவில்லையே என மற்றொருவர் கூறியுள்ளார். ஒரு திருமணத்திற்கு தேவை அன்பு, காதல் மட்டுமே, பட்டங்கள் அல்ல என மற்றொரு வாசகர் தெரிவித்துள்ளார்.







