ரஷ்யாவுக்கு முழு ஆதரவு: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடினுக்கு கிம் ஜாங் உன் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். மாஸ்கோவில் அதிபர் புடினை சந்தித்த அவர்,…

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடினுக்கு கிம் ஜாங் உன் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். மாஸ்கோவில் அதிபர் புடினை சந்தித்த அவர், ரஷ்யாவுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்தார். மேலும் வட கொரியாவுக்கு வருமாறு புடினுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதனை புடின் ஏற்றுக்கொண்டதாக கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடந்த போரைப் பற்றி மறைமுகமாக ஆனால் வெளிப்படையாகக் குறிப்பிடும் கிம், “ரஷ்யா தற்போது தனது இறையாண்மை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பாதுகாக்க மேலாதிக்க சக்திகளுக்கு எதிரான நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியிலும் சுதந்திரத்தின் முன்னணியிலும் எப்போதும் ரஷ்யாவுடன் நிற்போம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன் என்றும் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.

இதனிடையே வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் போடப்பட்டால், இரு நாடுகள் மீதும் கூடுதல் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.