அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2000-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அச்சரப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2000–ஆம்…

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2000-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அச்சரப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2000–ஆம் ஆண்டு படித்த மாணவ மாணவியர் சந்தித்துக் கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பள்ளிக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கினர்.

மாணவ மாணவியர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு குழந்தைகளுடன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவரவருக்குரிய கலாச்சார முறையில் சந்தித்து நெகிழ்ச்சி ஏற்படுத்தினர்.

முன்னாள் தோழிகளை தங்களது தோழிகளுடன் கட்டித் தழுவி அவரவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இதே போல் மாணவர்களும் அவர்கள் கட்டித்தழுவி குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்து நண்பர்களுடன் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இதுபோன்ற சந்திப்புகள் ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் என்றும், சந்திப்பு மூலமாக வறுமையில் உள்ள தங்களது நண்பர்களுக்கு அனைத்து மாணவ மாணவியரும் சேர்ந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

– ம. வெற்றி வேல்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.