ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ், ஸ்பீட் ஸ்கேட்டிங் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்தியா இதுவரை 13 தங்கம், 21 வெள்ளி 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை பெற்று 4வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் முகர்ஜி சகோதரிகள் தென் கொரியாவின் சுக்யோங் பாக் , சுயோக் சா இணையுடன் மோதினர். இதில் 3க்கு 4 என்ற கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்த அவர்கள் வெண்கலப்பதக்கத்தை பெற்றனர்.
இதேபோல் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் வெண்கல பதக்கம் வென்றுள்ளது. 3,000 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு இந்த இரண்டு பதக்கங்களும் கிடைத்துள்ளன.







