டி-20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் துபாயில் இன்று மோதுகின்றன.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. ‘சூப்பர்-12’ சுற்று முடிவில் ‘குரூப்-1’-ல் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ‘குரூப்-2’-ல் முதல் இரு இடங்களை பிடித்த பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அபுதாபியில், நேற்று நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாவது அரையிறுதி போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் அணி, பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் மிரட்டுகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான், கேப்டன் பாபர் அசம் சிறந்த ஃபார்மில் உள்ளனர். மிடில் ஆர்டரில் ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி ஆகியோர் அருமையாக ஆடி வருகின்றனர். வேகப்பந்துவீச்சில் ஷகின் ஷா அஃப்ரிடி, ஹரிஸ் ராஃப் அதிரடியாக மிரட்டுகிறார்கள். சுழலில் சதாப் கான், இமான் வாசிம் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியும் தொடர்ந்து இங்கிலந்துக்கு எதிரான போட்டி தவிர, மற்றப் போட்டிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் டேவிட் வார்னர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு பலம். ஸ்மித், மார்ஷ் ஆகியோர் கடந்த சில போட்டிகளில் ஜொலிக்கவில்லை. மேக்ஸ்வெல், ஸ்டோயினிஸ், மாத்யூ வேட் ஆகியோர் எப்போதும் அதிரடி அவதாரம் எடுக்கலாம் என்பதால் அந்த அணி பலமிக்கதாகவே இருக்கிறது. பந்துவீச்சில், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஆதம் ஜம்பா, ஹசல்வுட் அசத்தி வருகின்றனர். அதனால் இன்றைய போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
துபாய் ஆடுகளத்தில், பனி காரணமாக, இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியே அதிகம் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் இன்றைய போட்டியில் டாஸ் முக்கியத்துவம் பெறும் என்று கூறப்படுகிறது.