20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 19 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.







