தூத்துக்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகிலுள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்ற முதியவர், சிரப்பூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே வீட்டின் அருகே வசித்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், தங்கபாண்டியிடம் கேட்க, அவரது மகளும் மகனும் இணைந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தாய் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த தங்கபாண்டியின் மகள் வேதவல்லி, மகன் ராஜா உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.







