சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை நேற்று அதிகரித்தது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஏறி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் தலைவர்களும் இந்த விலை உயர்வைக் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளருமான கமல்ஹாசனும் இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது?’ என்று அவர் கூறியுள்ளார்.







