கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் படிவம் !

எண்ணூர் பக்கிங்காம் கேனல் வழியாக கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் படிவம் கலந்துள்ளது. இதனால் அரசு உடனே நடவடிக்கை எடுத்து எண்ணெய் படிவத்தை நீக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கொசஸ்தலை ஆறு அமைந்துள்ளது.   எண்ணூரை சுற்றி உள்ள எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், காட்டுகுப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் இந்த ஆற்றில் பைபர் படகுகள் மூலம் மீன் பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.

எண்ணூர் பக்கிங்காம் கேனல் வழியாக வரும் கால்வாயில் காட்டுக்குப்பம்
பகுதியில் எண்ணை படலம் தேங்கி முகத்துவாரம் ஆற்றில்  கலந்து கருமைநிற எண்ணெய் படிவம் படிந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் படகுகளை சுற்றி என்னை படலம் படிந்துள்ளது.

ஏற்கனவே இந்த ஆற்றில் தொழிற்சாலைகளில் இருந்து வரும் சுடுதண்ணீர் வெளியற்றப்படுவதாகவும் இதனால் மீனவர்களின் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மீன்கள் தெரிவிக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த எண்ணை கலந்திருப்பது மீனவர்களின் வாழ்வை
பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் நிரந்தரமாக எண்ணெய் படலத்தை தடுத்து நிறுத்த
வேண்டும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது லேசான மழை பெய்து வருவதால் எண்ணெய் படலும் மேலும் அதிக அளவு
பரவக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.