ஹேக் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு-கட்சியினர் அதிர்ச்சி!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட விவிஐபிகளின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்வதை ஹேக்கர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த…

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட விவிஐபிகளின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்வதை ஹேக்கர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கை சில ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர்.

All India Trinamool Congress என்ற பெயரில், மம்தாவின் முகப்புப் படத்துடன் செயல்பட்டு வந்த அந்த ட்விட்டர் கணக்கை 6.49 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் அந்தக் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள் முகப்புப் படத்தை மாற்றி, Yuga Labs என்று பெயரையும் மாற்றினர். ஆனால் ஹேக் செய்யப்பட்ட பிறகு எந்த பதிவையும் போடவில்லை. Yuga Labs என்பது கிரிப்டோகரன்ஸி நிறுவனம் சம்பந்தப்பட்ட பெயராகும்.

இதையும் படிக்க: மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

இதுகுறித்து திரிணாமுல் கட்சியினர் உடனடியாக ட்விட்டர் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சிறிது நேரத்துக்கு பிறகு அந்தக் கணக்கு ஹேக்கர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.