ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி காலமானார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமிக்கு ஒரு வாரம் முன்பு குடல் இரப்பை அறுவைச் சிகிச்சை…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

சமீபத்தில் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமிக்கு ஒரு வாரம் முன்பு குடல் இரப்பை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த விஜயலட்சுமியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விஜயலட்சுமியின் உயிரிழப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கனிமொழி எம்.பி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில் இன்று(செப்.1) அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிர மாரடைப்புக்கு உள்ளானார். உடனடியாக இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்டோர் தக்க சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.