முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் உலக வங்கி உதவியுடன் ‘RIGHTS’ முன்மாதிரி திட்டம்

உலக வங்கி உதவியுடன் RIGHTS என்ற முன்மாதிரி திட்டம் செயல்படுத்தப்படும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பில், இத்திட்டம் நமது நாட்டில் மட்டுமின்றி உலகிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டமாகும். அரசால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் பயன்களை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் விடுபடாமல் பெறும் பொருட்டு மாநிலத்தின் வட்டார மற்றும் உட்பிரிவு நிலை வரை துறையின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த இத்திட்டம் வழிவகை செய்கின்றது. ஆறு ஆண்டுகளில் ரூ .1702 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

  • திட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்கள்
  • மாற்றுத் திறனாளிகளை ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் ஒருங்கிணைத்தலுக்காக நிலையான வழிமுறைகளை உருவாக்குதல். தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் செயலாக்கம் குறித்து வரையறுத்தல். பதிவு செய்யவும் சான்றளிக்கவும் வழிமுறைகளை உருவாக்குதல். தகவல் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குதல்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான நோய் தடுப்பு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள், தொழிற்கல்வி, தன்னிறைவு, வேலை வாய்ப்பு ஆகியவை சென்றடைவதை உறுதி செய்தல்.
  • மாற்றுத்திறனாளிகளின் பின்னடைவு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், சமூகம் சார்ந்த மறுவாழ்வுப் பணிகள், உபகோட்ட தலைமையிடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட மறுவாழ்வுப் பணிகள், வட்டார தலைமையிடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய பராமரிப்பு மையங்கள், நடமாடும் சிகிச்சை வாகனங்கள், தடையற்ற உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, போக்குவரத்து மற்றும் இச்சேவைகள் சென்றடைவதை உறுதி செய்ய நிதி ஆதாரத்தை ஏற்படுத்துதல்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவன திறன் மேம்படுத்துதல், செயல்படுத்துதல், திட்ட செயலாக்கம், திட்ட செயல்பாட்டிற்கான வழிமுறைகள், மனித வளத்தை உறுதிப்படுத்த மேலாண்மைத் திட்டம், நடைமுறையை உருவாக்குதல், நிதி மேலாண்மை நடைமுறை உருவாக்குதல், மனித வளத்தை மேம்படுத்த பயிற்சி அளித்தல் என நான்கு முக்கிய அம்சங்களை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது. என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement:
SHARE

Related posts

காவிரியில் நீர்வரத்து 13 ஆயிரம் அடியாக குறைந்தது

Gayathri Venkatesan

சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

Jeba Arul Robinson

இந்தியாவில் ரபேல் போர் விமானம் 14- ஆக உயர்வு!