நடப்பாண்டிற்கான மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கடந்த ஜூலை 29-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையின்படி மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை நடத்தலாம் என உத்தரவிட்டனர்.மேலும், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு உறுதிசெய்யப்படுவதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு கடைபிடிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







