செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் என்பவர் செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள கடையில் தேநீர் குடிக்க சென்றபோது மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த மற்றொரு காய்கறி வியாபாரியான மகேஷ் என்பவரையும் மர்ம கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், இரட்டை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய தினேஷ், மொய்தீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். உத்தரமேரூர் பகுதியில் அழைத்து வந்தபோது, அவர்கள் காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, தற்காப்புக்காக தினேஷ், மொய்தீன் ஆகியோரை போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசார் மீது வீச முயன்ற நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.