அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தரும் வரை திமுக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தர திமுக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் அறிவிப்பு ஆறுதல் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், திமுக தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தியதாகவும், மேலும், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.
69 சதவீத இடஒதுக்கீட்டின்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் தங்களது அழுத்தமான கோரிக்கை என்றும், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை திமுக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.