ஆசிரியர்கள் வரும் 2ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதையொட்டி பள்ளிகளை திறப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அனைத்து பிரிவு ஆசிரியர்களும் வருகிற 2ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் மற்றும் இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு பணிக்கு செல்வதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து பள்ளிக்கு செல்வதில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.