திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துக்கொண்டார்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துக் கொண்டார். அப்போது அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் இருந்தனர். அதிமுக ஆட்சியில் ஓ. பன்னீர்செல்வம் 3 முறை முதலமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.