முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புரட்சித் தொண்டன் எனும் நாளிதழை வெளியிட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நமது புரட்சித் தொண்டன் நாளிதழ் வெளியீட்டு விழா பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமயில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் ,
பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ”நமது புரட்சித் தொண்டன்” நாளிதழை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
இதன் பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது..
” நமது இயக்கத்தில் துரோகிகளுக்கு இடமில்லை, மக்களும் தொண்டர்களும் நம்மோடு தான் உள்ளனர். நமக்கெண்ரு ஒரு பத்திரிக்கை வேண்டும் என கழக தொண்டர்களின் கோரிக்கையால் தான் நமது புரட்சி தொண்டன் என்கிற நாளிதழை தொடங்கியுள்ளோம். இதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக செயல்படுகிறார்
தான் ஏற்றுகொண்ட தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என எழுதி
கொண்டிருப்பவர் மருது அழகு ராஜ். தனது எழுத்தால் எதிர்கட்சிகளுக்கு சிம்ம
சொப்பனமாக திகழ்பவர் நமது கழக நாளிதழில் பணியாற்றியவர். எந்த காலத்திலும் அரசியல் நாகரீகத்தில் இருந்து குறைந்துவிடாமல் எதிர் கட்சிகளும் பாராட்டும் விதமாக கருத்துக்களை முன்வைத்த அண்ணா வழியில் நமது புரட்சி தொண்டன் நாளிதழ் செயல்படும்.
தொண்டர்களிடம் இருந்து ஆண்டு சந்தா பெற்றுள்ளோம். அடித்தட்டு தமிழக மக்கள் முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யும் வகையில் நாளிதழில் செய்திகள் வெளியாகும் என்பது தான் புரட்சி தொண்டன் இலக்கு. அவை எதிர்காலத்தில்
நாம் வெல்லாப்போகும் அரசியல் வெற்றியின் வழி நடைமுறைபடுத்தப்படும்
எம்ஜிஆர் வகுத்த சட்டம், தொண்டனுக்கு கொடுத்த உச்ச பட்ச மரியாதை, தொண்டனும் தலைமைக்கு போட்டியிடும் வாய்ப்பு, அதற்கு சிறு மாசு ஏற்படுவதற்கு யாராவது முயற்சித்தால் அதை முளையிலே கிள்ளி எறியும் சக்தியாக தான புரட்சி தொண்டன் நாளிதழ் இருக்கும்” என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.







