முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நலமுடன் இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு எம்ஜிஎம் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் லேசானா கொரோனா தொற்று அறிகுறிகளுடன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவரை தனிமைப்படுத்தபட்ட வார்டில் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவர் குழு தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.








