அரசகுழி கிராமத்தில் சமபந்தி கறி விருந்து!

சாதி, மதம், மொழி என பிரிவு இல்லாமல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மறந்து அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் அரசகுழி கிராமத்தில் சமபந்தி கறி விருந்து நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்துள்ள அரசக்குழி…

சாதி, மதம், மொழி என பிரிவு இல்லாமல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மறந்து அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் அரசகுழி கிராமத்தில் சமபந்தி கறி விருந்து நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்துள்ள அரசக்குழி கிராமத்தில் உள்ள புனித
உத்தரிய அன்னை ஆலயத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி சுற்றுவட்டார கிராம மக்கள்
அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் சாதி, மத, மொழி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மறந்து, ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளை மறந்து அனைவரும் சமமாக அமர்ந்து சமபந்தி கறி விருந்து நடைபெற்றது. இதில், 62 வெள்ளாட்டின் 700 கிலோ அளவிலான கறியை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விழாவில் அரசுக்குழி, சாத்தமங்கலம், அகரம், கொளப்பாக்கம், பொன்னால்அகரம், கொம்பாடி குப்பம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்வத்துடன் ஒற்றுமையாக அமர்ந்து கறி விருந்தில் கலந்துகொண்டனர். இதில், மதியம் 12 மணி முதல் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு வருவதாகவும், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகவும் விழா குழுவினர் தெரிவித்தனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க தடுப்புக் கட்டைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.