கரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கண்ணில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்ணில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக, சத்துணவு மற்றும் அங்கன்வாடி
ஓய்வூதியர்களுக்கு மாதம் தோறும் சிறப்பு ஓய்வூதியம், ரூ.6750 அகவிலைப்படியுடன்
வழங்க வேண்டும், எனவும் அரசு துறைகளில் உள்ள காலி பணி இடங்களில் தகுதியுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை தேர்வு செய்யவும், வரையறுக்கப் பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுருத்தினர்.
மேலும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
—ம. ஶ்ரீ மரகதம்







