நீர் வீணாக செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கிய நகராட்சி அதிகாரிகள்!!

நகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் இடத்தில் நீர் விணாக ஓடையில் செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் ஆதாரமாக…

நகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் இடத்தில் நீர் விணாக ஓடையில் செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோத்துப்பாறை அணை. அணை நீர் போதிய நீரின்றி மாசுபட்டதால் நீரை வெளியேற்றி கொடைக்கானல் பேரிச்சி நீர்வீழ்ச்சிலிருந்து புதிய நீர் கொண்டுவரப்பட்டது. அந்த நீரை பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டு வருகிறது. தற்பொழுது அணையில் நீர்மட்டம் 50 அடி வரை உயர்ந்துள்ளதால் குடிநீருக்காக அணையில் குறைந்த அளவு நீர் திறக்கப்பட்டது.

திறக்கப்படும் நீர் அணைக்கு கீழ் உள்ள ஓடைகளில் செல்வதால் பெரியகுளம் நகராட்சிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. நகராட்சி ஆணையாளர் புனிதன் நகராட்சிக்கு குடிநீர் பிரித்தெடுக்கும் இடத்தில் நேரில் ஆய்வு செய்த போது அணையிலிருந்து குடிநீருக்காக திறந்துவிடப்படும் நீர் வீணாக ஓடையில் செல்வதை கண்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து நீர் வீணாவதை தடுக்கும் விதமாக நகராட்சி ஊழியர்களை கொண்டு மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி நீர் விணாக செல்வதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.