‘உயிர்’, ‘உலகம்’ – முதல் முறையாக இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா

நடிகை நயன்தாரா, முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி…

நடிகை நயன்தாரா, முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

பின், இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.

தொடர் சர்ச்சைகளில் சிக்கிய தம்பதியர்கள், குழந்தைகளின் பெயரையும், முகத்தையும் வெளியிடாமல் காத்து வந்தனர். விக்னேஷ் சிவன் ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில், குழந்தைகளை பற்றி பதிவிடும் போது,’உயிர்’, ‘உலகம்’ என பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா தனது மகன்களில் முழு பெயரை அறிவித்து இருக்கிறார்.

அதன்படி, ஒரு மகனுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன் ( Uyir Rudronil N Shivan ) என்றும் மற்றொரு பிள்ளைக்குஉலக் தெய்விக் என் சிவன் ( Ulag Dhaiveg N Shivan ) என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இவர்களின் பெயர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் வித்தியாசமானதாக உள்ளதாக பலரும் தெர்வித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.