கண்ணில் கருப்பு துணி கட்டி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

கரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். கரூர் மாவட்டம், தலைமை தபால் நிலையம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு…

கரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கரூர் மாவட்டம், தலைமை தபால் நிலையம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய் ஊழியர்களுக்கு இணையாக சத்துணவு அங்கன்வாடி  ஊழியர்களுக்கு  மாதந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ 6750 வழங்க கோரியும், அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும் மற்றும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அங்கன்வாடி ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.